Tempo
5-6-2013
======
மகாத்மா காந்தி ஊராக வேலைவாய்ப்பு திட்டம் நல்லதுதான். ..1) நிலத்தில் இறங்கி தானே வேலை செய்யாத எவருக்கும் , நில உடமை இருக்கக்கூடாது. 2) இரண்டு ஸ்டாண்டர்ட் ஏக்கருக்கு மேல் எவருக்கும் நிலம் கூடாது. 3) நீர்ப்பாசன வசதி உள்ள எந்த பகுதியிலும், தொழிற்சாலை அமையக்கூடாது 4) விலை நிலங்களாக இருந்த இடங்கள் , வீடு கட்ட தடை விதிக்கவேண்டும். அந்த நிலங்களை அரசு கைப்பற்றவேண்டும். 5) உச்சவரம்பிற்கு மேற்ப்பட்ட நிலத்தை , நிலமில்லாத விவசாய தொழிலாளருக்கு இலவசமாக தரவேண்டும். 6) குளங்கள், கண்மாய்களை தூர்வார வேண்டும் 7) தமிழ்நாடெங்கும், வீட்டுமனைகள், வீடுகள், மாநில வீடு வசதி வாரியம் மூலமே அளிக்கப்பட வேண்டும். 8) நீர்நிலை பராமரிப்பு, மரம் நட்டு வளர்த்தல், காய்கனி விளைவித்தல், இயற்க்கை உரம் தயாரித்தல், பற்றி மாணவர்களுக்கு , NCC, SCOUT, SOCIAL SERVICE LEAGUE
அமைப்புகளின் மூலம் பயிற்சியும் , 'உழைப்பு தான '
மனப்பாங்கும் வளர்க்கப்படவேண்டும். ..9) குளங்கள், கண்மாய்கள் , நீர்பிடிப்பு , நீர்வரத்து பகுதிகளில், தடை ஏற்படுத்துவோரை, 10 ஆண்டுகளுக்கு கடுங்காவல் தண்டனை தரவேண்டும். ...10) மக்கள் தொகை கட்டுப்பாடு மிகவும் தேவை ....MY RESPONSE TO DINAMANI EDITORIAL TODAY..
...
இலங்கையின் பழைய சரித்திரத்தை விளக்கும் "மகா வம்சம்" என்ற பௌத்த சரித நூல், அந்நாட்டின் முதல் வேந்தனும் , புத்தர் மறைந்த கி.மு.478ல் இலங்கையை ஆட்சி செய்தவனுமான விஜயன் , ஒரு பாண்டியர் குலப்பென்மணியை மணந்தான் என்றும், ஆண்டுதோறும் தன மாமனாகிய பாண்டியர்க்கு சிறந்த பரிசில் அனுப்பினான் என்றும் கூறுகிறது!........( பாண்டியர் வரலாறு......கல்வெட்டு ஆராய்சிப்பேரறிஞர் சதாசிவ பண்டாரத்தார்.).
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் சனிக்கிழமை நடைபெற்ற வேளாண் பல்கலைக்கழக 3ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கிய பின், அவர் பேசியது:....இந்தியாவில் மக்கள் தொகைப் பெருகி வருகிறது. 2020ஆம் ஆண்டில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு தகுந்தபடி 340 லட்சம் டன் உணவுப் பொருள்கள் தேவைப்படும். இந்தியாவில் தற்போது 170 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பில் மட்டும் விவசாயம் செய்யப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் இது 100 லட்சம் ஹெக்டேர் நிலமாகக் குறையும். அப்போது உணவு உற்பத்தியும் சரியும்......இதைக் கருத்தில் கொண்டு, வேளாண் துறையைப் புத்துணர்வு ஊட்ட வேண்டியது அவசியம். சிறு விவசாயிகளை ஒருங்கிணைந்து, கூட்டுப் பண்ணையை ஊக்குவித்து, விவசாயத்தில் தொழில் நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாத மதிப்புக் கூட்டிய சந்தையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
.......பால், சர்க்கரை உற்பத்தியில் கூட்டுறவு முறை வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, வேளாண் துறையில் கூட்டுறவு முறையைப் பிரபலப் படுத்த வேண்டும். காய்கறி, தோட்டக்கலை உற்பத்தி பெருகி வருவதாக அறிகிறேன். ஆனால், சந்தை வாய்ப்புகள் சரியாக அமையாததால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாத நிலை காணப்படுகிறது.....விவசாயிகளின் விளை பொருள்களுக்கு சரியான விலை கிடைக்காதது குறித்து ஆய்வு நடத்தித் தீர்வு காண வேண்டும். கூட்டுப் பண்ணைத் திட்டம், சரியான விலை ஆகியவற்றை கொடுத்து விட்டால், விவசாயிகள் முன்னேற்றம் காண்பார்கள். இதுதொடர்பான பாடத்தை வேளாண் பல்கலைக்கழகங்களில் கற்பிக்க வேண்டும்.....
எல்லாக் கிராமங்களையும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களுடன் சாலைகள் வழியாக இணைக்க வேண்டும். கிராமங்களில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். தொழில் முதலீடுகளை கிராமப்புறங்களில் அதிகளவில் ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.
( from dinamani ...today)
-------------------------------------